ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தமா?

தினமலர்  தினமலர்
ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தமா?

புதுடில்லி : 'ரூ.2,000 நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்துவது குறித்து, இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

லோக்சபாவில் நேற்று, மத்திய நிதித் துறை இணை அமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான அனுராக் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:ரிசர்வ் வங்கி அளிக்கும் ஆலோசனைகளின் அடிப்படையில், எந்தெந்த ரூபாய் நோட்டுகளை, எவ்வளவு அச்சிடுவது என்பது குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கும்.கடந்த, இரண்டு நிதி ஆண்டுகளில், 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது தொடர்பாக எந்த அறிவுறுத்தலும் பெறப்படவில்லை. ஆனாலும், 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்துவது குறித்து, இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.


கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டதாக, ரிசர்வ் வங்கி ஏற்கனவே தெரிவித்தது. தற்போது, படிப்படியாக அந்த பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன.இவ்வாறு, அவர் பதில் அளித்தார்.

மூலக்கதை