கொழும்பு குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுடன் பெங்களூர் போதை பொருள் கும்பலுக்கு தொடர்பு: முக்கிய ஆதாரம் சிக்கியது; என்ஐஏ விசாரணை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொழும்பு குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுடன் பெங்களூர் போதை பொருள் கும்பலுக்கு தொடர்பு: முக்கிய ஆதாரம் சிக்கியது; என்ஐஏ விசாரணை

திருவனந்தபுரம்: பெங்களூருவில் கடந்த சில மாதங்களுக்கு முன் மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு நடத்திய விசாரணையில் போதை பொருள் கும்பலை சேர்ந்த கன்னட டிவி நடிகை அனிகா, முகம்மது அனூப், ரவீந்திரன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் கன்னடம் மற்றும் மலையாள நடிகர், நடிகைகளுக்கு போதை பொருள் சப்ளை செய்தது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் கன்னட நடிகைகளான ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தவிர மேலும் பல முக்கிய கன்னட நட்சத்திரங்களுக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.



இதையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. கைது செய்யப்பட்ட முகம்மது அனூப் மற்றும் ரவீந்திரன் இருவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்கள் மலையாள சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் கொழும்புவில் கடந்த வருடம் ஏப். 21ம் தேதி சர்ச் உள்பட 8 இடங்களில் குண்டு வெடித்தது.

இந்த சம்பவத்தில் சஹ்ரான் ஹாஷிம் என்பவர் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறது. தொடர்ந்து நடந்த விசாரணையில் இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பெங்களூரு வந்து சென்றது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியது.

இதில் சஹ்ரான் ஹாஷிமின் கூட்டாளியான ஆதில்அமீஸ் என்பவரும் பெங்களூருவுக்கு அடிக்கடி வந்து சென்றதும், இவர்கள் இருவருக்கும் தற்போது பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ள போதை பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்து இருந்ததும் தெரிய வந்துள்ளது.

இதற்கான முக்கிய ஆதராங்கள் என்ஐஏவுக்கு கிடைத்துள்ளதையடுத்து பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ள போதை பொருள் கும்பலிடம் விசாரணை நடத்த என்ஐஏ தீர்மானித்துள்ளது.

.

மூலக்கதை