பீகார் மாநிலத்தில் 541 கோடியில்வளர்ச்சி திட்டப்பணி: அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

தினகரன்  தினகரன்
பீகார் மாநிலத்தில் 541 கோடியில்வளர்ச்சி திட்டப்பணி: அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

புதுடெல்லி: விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள பீகார் மாநிலத்தில் 541 கோடி மதிப்பிலான கட்டமைப்பு திட்டங்களுக்கான பணியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.  பீகார் மாநிலத்தில் வருகிற அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் 7 நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்ட பணிகளுக்காக மத்திய அரசு  541 கோடியை ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியில் 4 குடிநீர் விநியோக திட்டங்கள், 2 கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டங்கள் மற்றும் ஆற்றுப்படுகை மேம்பாட்டு திட்டம் என 7 திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.  இந்த திட்ட பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. டெல்லியில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலமாக கலந்து கொண்ட பிரதமர் நரேந்திரமோடி பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது: பீகாரில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாவானது மாநிலத்தின் வளர்ச்சிக்காக உழைக்காமல் சுயநலத்திற்காக மட்டுமே செயல்பட்டது. தற்போதுள்ள மாநில அரசுடன் இணைந்து பீகாரின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்காக மத்திய அரசு பாடுபட்டு வருகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.  1,264 கோடியில் எய்ம்ஸ்: இதற்கிடையே, பீகார்மாநிலம் தர்பாங்கா என்ற இடத்தில் 1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய  அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கி அறிவித்தது.

மூலக்கதை