நாட்டு மக்கள் அனைவருக்கும் சுகாதார அடையாள அட்டை - சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி அறிவிப்பு

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

நாட்டு மக்கள் அனைவருக்கும் சுகாதார அடையாள அட்டை - சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி அறிவிப்பு

    தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இந்தியாவின் 74வது சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அப்போது பிரதமர் மோடி நிகழ்த்திய உரையில் ‘தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு இந்தியருக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும். அதில் அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகள். கொடுக்கப்பட்ட மருந்துகள் போன்றவை சேமித்து வைக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சுகாதார பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று கூறினார். மேலும் விவசாயம். உற்பத்தி. பெண்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள் குறித்த அறிக்கையும் அவர் பேசிய உரையில் இடம்பெற்றன.

மூலக்கதை