அரை நிர்வாண உடலில் ஓவியம்: ரெஹானா பாத்திமா முன்ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி

தினகரன்  தினகரன்
அரை நிர்வாண உடலில் ஓவியம்: ரெஹானா பாத்திமா முன்ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டுடன் சென்று பரபரப்பை ஏற்படுத்தியவர் ரெஹானா பாத்திமா. இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இவரது அரை நிர்வாண உடலில் தனது 12 வயதிற்கு உட்பட்ட 2 குழந்தைகளை வைத்து ஓவியம் வரைந்து, அதை ேபஸ்புக்கில் வீடியோவாக ெவளியிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது ெதாடர்பாக பாஜவை சேர்ந்த அருண் என்பவர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து ரெஹானா பாத்திமா மீது போக்சோ மற்றும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தலைமறைவானார். இந்த நிலையில் முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான 3 பேர் அடங்கிய ெபஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ரெஹானா பாத்திமாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ேமலும் இது ஆபாசத்தை பரப்பும் செயலாகும் என கூறி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மூலக்கதை