ஒரே நாளில் 52,972 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியது; 38,135 பேர் பலி..!!!

தினகரன்  தினகரன்
ஒரே நாளில் 52,972 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியது; 38,135 பேர் பலி..!!!

டெல்லி: உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இதற்கிடையே, கடந்த ஜூலை 27-ம் தேதி வரை இந்தியா முழுவதும் மொத்த கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளிப்படையாக அறிவித்து வந்தது. ஆனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை தாண்டியதால், கடந்த 28-ம்தேதி முதல் மொத்த பாதிப்பு தகவல் வெளியிப்படவில்லை. குணமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள், சிகிச்சை பெற்றுபவர்களின் விவரங்ளை வெளியிட்டு வருகிறது.இதன்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 38,135 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 771 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 11,86,203 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 40,574 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5,79,357 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 18,03,695 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 52,972 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் இதுவரை 15,576 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2,76,809 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 1,48,843 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வரிசையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 4132 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,96,483 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 56,998 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 4004 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,23,317 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 10,356 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை