ராஜஸ்தானில் அதிரடி அரசியல் திருப்பங்கள்.: சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்

தினகரன்  தினகரன்
ராஜஸ்தானில் அதிரடி அரசியல் திருப்பங்கள்.: சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில், முதல்வா் அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே தொடக்கத்தில் இருந்தே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில், மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி வேலை செய்வதகாக கெலாட் அண்மையில் குற்றம்சாட்டினாா். அதைத் தொடா்ந்து, சச்சின் பைலட் உள்ளிட்டோருக்கு காவல் துறை சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால், அதிருப்தியடைந்த அவா் தனது ஆதரவாளா்களுடன் டெல்லியில் முகாமிட்டாா். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் மேலிடத் தலைவா்கள் ஈடுபட்டனா்.இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் இரண்டு முறை நடைபெற்றது. அந்த இரண்டு கூட்டத்திலும் சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் ராஜஸ்தான் துணை முதல்வா், காங்கிரஸ் மாநிலத் தலைவா் ஆகிய பதவிகளில் இருந்து சச்சின் பைலட் நேற்று நீக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே , \'காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து விளக்கமளிக்க சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 2 நாளில் விளக்கம் அளிக்காவிடில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததாக கருதப்படும்\', என்று அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை