எம்டி படிப்பில் 50% உள்ஒதுக்கீடு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்: இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு கேள்வி

தினகரன்  தினகரன்
எம்டி படிப்பில் 50% உள்ஒதுக்கீடு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்: இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு கேள்வி

புதுடெல்லி: முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத உள்ஒதுக்கீடு கோரிய வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. தமிழக மருத்துவ சங்கம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் கிராமப்புற, மலை பகுதிகளில் பணிபுரியும் மருத்துவ மாணவர்களுக்கு மேல் படிப்பில் 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க கோரியதில் இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் கடந்த 2018ல் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உட்பட சில மாநிலங்கள் தரப்பில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்தவழக்கு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, வினீத் சரண் மற்றும் எம்.ஆர்.ஷா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள்,\'முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் இன் சர்வீஸ் மருத்துவர்கள் தொடர்பாக என்ன பிரச்னை? மேலும், மனுதாரருக்கு இது குறித்து நடத்தப்படும் தேர்வு முறையிலா அல்லது வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் பிரச்னையா என்பது புரியவில்லை. இந்த விவகாரம் குறித்து இந்திய மருத்துவ கவுன்சிலின் நிலைப்பாடு என்ன?’ என சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஹேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

மூலக்கதை