பிளாக் லைப் மேட்டர் அமைப்புக்கு சிக்கல்; நியூயார்க்கில் தொடரும் எதிர்ப்பு

தினமலர்  தினமலர்
பிளாக் லைப் மேட்டர் அமைப்புக்கு சிக்கல்; நியூயார்க்கில் தொடரும் எதிர்ப்பு

நியூயார்க் : அமெரிக்காவின் மிகப்பெரிய அமைதிப் போராட்ட அமைப்பு பிளாக் லைஃப் மேட்டர்ஸ். கடந்த 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அமைப்பில் கருப்பின அமெரிக்கர்களுக்கு எதிரான அமெரிக்க போலீஸாரின் அடக்குமுறைக்கு எதிராக அமைதி வழியில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் அமெரிக்கர்கள் மட்டுமல்லாமல் அமெரிக்காவில் உள்ள வெள்ளை இனத்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஜார்ஜ் புளாயிட் படுகொலையை அடுத்து இந்த அமைப்பு அதிக கவனம் பெற்றது. தற்போது உலக அளவில் மிகப்பெரிய புரட்சிகர அமைப்பாக விளங்குகிறது. இந்த அமைப்பினர் அவ்வப்போது அரசு அனுமதியுடன் நியுயார்க், கலிபோர்னியா உள்ளிட்ட மாகாணங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் போராட்ட பதாகைகளை ஏந்தி 'ரெவல்யூஷனரீஸ் வால் பெயிண்டிங்' எனப்படும் புரட்சிகர ஓவியங்களை பொதுச் சுவர்களில் வரைந்து தங்கள் எதிர்ப்பை அவ்வப்போது வெளிக்காட்டினர்.

2016ம் ஆண்டுக்குப் பின்னர் சமூக வலைதளங்களில் இந்த அமைப்பு மேலும் புகழ்பெற்றது. குறிப்பாக டுவிட்டர் வலைதளத்தில் இதற்கு ஆதரவாளர்கள் குவிந்தனர். பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் இந்த அமைப்புக்கு ஆதரவு குவிந்தது. தற்போது நியூயார்க்கில் உள்ள கேட்ஸ்கில் பகுதியில் பிளாக் லைஃப் மேட்டர்ஸ் அமைப்பினர் பேரணி நடத்தினர்.

இதன் எதிர்ப்பாளர்கள் ஜார்ஜ் புளாயிட் படுகொலையை அடுத்து இந்த அமைப்புக்கு எதிராக அதிக எதிர்ப்பைக் காட்டாமல் இருந்தனர். ஆனால் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது, பொது சுவர்களில் புரட்சி ஓவியங்களை வரைவது உள்ளிட்ட அத்துமீறல்களில் ஈடுபட்டதால் அமெரிக்க குடிமக்கள் சிலர் கொதிப்படைந்தனர். தனியார் நிறுவன சுவர்கள், வீட்டுச் சுவர்கள் மீதும் இவர்கள் அடிக்கடி தங்கள் ஓவியங்கள் மற்றும் கருத்துக்களை வரைந்து வந்தனர்.

இதனால் நியூயார்க் குடிமக்கள் இவர்கள்மீது தாக்குதல் நடத்தினர். போராட்டம் என்ற பெயரில் சில சமயங்களில் இவர்கள் அத்துமீறுவது பலருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. அதேசமயம் இந்த அமைப்புக்கு ஜெஃப் பிசோஸ், எலான் மஸ்க் உள்ளிட்ட பெரிய தொழிலதிபர்கள் பலர் ஆதரவு அளித்து நிதி அளித்து வருகின்றனர். இந்த அமைப்பின் உறுப்பினர்களை அவ்வபோது கண்டித்து வருகிறது டிரம்ப் அரசு.

ஜார்ஜ் புளாயிட் படுகொலையில் குற்றவாளிகளான டெரெக் சாவின் மற்றும் இதர 3 போலீசார் ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்க அரசை வலியுறுத்தி இந்த அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது இந்த போராட்டம் ஓய்ந்திருக்கும் நிலையில், மீண்டும் வன்முறை செயல்களில் இந்த அமைப்பு ஈடுபட்டால் நாங்களும் தாக்குவோம் என இந்த அமைப்பின் எதிர்ப்பாளர்கள் கிளம்பியுள்ளனர்.

நாளுக்கு நாள் என் அமைப்பின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கு நியூயார்க் மேயர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மூலக்கதை