திருப்பதியில் 11ம் தேதி முதல் தரிசனத்துக்கு அனுமதி

தினகரன்  தினகரன்
திருப்பதியில் 11ம் தேதி முதல் தரிசனத்துக்கு அனுமதி

* 8ம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு தொடக்கம் * வெளிமாநில பக்தர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 11ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக 8ம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. வெளிமாநில பக்தர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது, வரும் 11ம் தேதி முதல் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இது குறித்து தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில் குமார் சிங்கால் நேற்று அளித்த பேட்டி:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 70 நாட்களுக்கு பிறகு வரும் 8, 9ம் தேதிகளில் முதற்கட்டமாக சோதனை முறையில் தேவஸ்தான பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். 10ம் தேதி திருமலையை சேர்ந்த உள்ளூர் பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். வெளிமாநிலத்தில் இருந்து வரும் பக்தர்கள், ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரக்கூடிய பக்தர்கள் 11ம் தேதி முதல் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக ஆன்லைனில் 11ம் தேதி முதல் ஜூன் மாதம் முழுவதுக்கும் ₹300 கட்டணம் செலுத்தி தரிசன டிக்கெட், அறைகளை பக்தர்கள் https:/tirupatibalaji.ap.gov.in என்ற வெப்சைட் மூலம் 8ம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். 65 வயதிற்கு மேல் உள்ள முதியவர்கள், 10 வயதுக்குட்பட்டவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். காலை 6.30 முதல் இரவு 7.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.  வெளிமாநில பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்த  பிறகு ஆந்திர அரசின் http://spandana1.ap.gov.in/Registration/onlineRegistration.aspx என்ற வெப்சைட் மூலம் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும். இ - பாஸ் பெறாமல் தரிசன டிக்கெட் மட்டும் பக்தர்கள் பெற்று வந்தால் மாநில எல்லையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆன்லைனில் தரிசன டிக்கெட் கிடைக்காத பக்தர்களுக்காக திருப்பதி அலிபிரியில் 3000 இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.ஒரு மணி நேரத்திற்கு 500 பேர் தரிசிக்கலாம்அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி மேலும் கூறும்போது, `‘தரிசனத்துக்கு ஒரு மணி நேரத்திற்கு 500 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தெப்பக்குளத்தில் பக்தர்கள் குளிக்க அனுமதி இல்லை. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், கோவிந்தராஜ சுவாமி கோயிலிலும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும்,’’ என்றார்.கொரோனா பரிசோதனைசுப்பாரெட்டி மேலும் கூறுகையில், ‘`தீர்த்தம், சடாரி வழங்குவது நிறுத்தப்படும். மாலை 4 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலைப்பாதையில் அனுமதிக்கப்படுவார்கள். வைகுண்டம் காத்திருப்பு அறையில் 100 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும்,’’ என்றார்.

மூலக்கதை