வருங்கால தலைமுறைக்காக பல்லுயிரை காப்போம்: பிரதமர் மோடி அழைப்பு

தினகரன்  தினகரன்
வருங்கால தலைமுறைக்காக பல்லுயிரை காப்போம்: பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: ‘உலக சுற்றுச்சூழல் தினத்தில் பல்லுயிர்களை பாதுகாக்க நாம் அனைவரும் இணைந்து இந்நாளில் உறுதியேற்க வேண்டும்,’ என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.இது தொடர்பாக பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `உலக சுற்றுச்சூழல் தினமான இன்று (நேற்று) இந்த உலகினை வருங்கால தலைமுறையினருக்கு ஏற்ற சிறந்த இடமாக மாற்றுவதற்கு நாம் அனைவரும் இணைந்து உறுதியேற்க வேண்டும். இந்த ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் தினத்தின் மைய கருத்து, தற்போதைய சூழலுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. அதன்படி, இன்றைய தினத்தில் பல்லுயிர்களை பாதுகாக்க உறுதிமொழி எடுப்போம். ஒலி, காற்று மாசுவினால் பறவைகள், விலங்கினங்கள் அழிந்து வருகின்றன. பாரம்பரிய வழிமுறைகளை பின்பற்றி மழை நீரையும் சேமிக்க வேண்டும். மரம் நடுதலை தீர்மானமாக எடுத்து கொண்டு மரக்கன்றுகளை நட வேண்டும். வெயில் காலம் என்பதால் பறவைகளுக்கு தண்ணீர் வையுங்கள்,’ என்று கூறியுள்ளார்.

மூலக்கதை