ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ36,400 கோடி வழங்க அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ36,400 கோடி வழங்க அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபோதே, மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பீட்டை 5 ஆண்டுகளுக்கு ஈடுகட்ட மத்திய அரசு உறுதி அளித்தது. இதன்படி, குறிப்பிட்ட சதவீதத்துக்கு கீழ் வருவாய் குறையும் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

மாநிலங்களுக்கு கடந்த அக்டோபர் - நவம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை 2வது கட்டமாக ரூ. 14,103 கோடியை ஏப்ரல் 7ம் தேதி மத்திய அரசு வழங்கியது. முன்னதாக கடந்த பிப்ரவரி 17ம் தேதி 19,950 கோடி வழங்கப்பட்டது.

இத்துடன் சேர்த்து மொத்தம் 34,013 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய இதே அளவு இழப்பீடு தொகை, அதாவது, 30,000 கோடி முதல் 34,000 கோடி, மாநிலங்களுக்கு வர வேண்டியுள்ளது.



டிசம்பர் - ஜனவரி மாதத்துக்கான இழப்பீடு, பிப்ரவரி மாதத்தில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பொருளாதார மந்தநிலை மற்றும் இழப்பீடு வரி நிதியில் போதுமான இருப்பு இல்லாததால் இதனை வழங்க இயலவில்லை என்று மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக தற்போதைய சூழ்நிலையில் மாநில அரசுகளின் வருவாய் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால், டிசம்பர் முதல் காலப்பகுதியில் இருந்து பிப்ரவரி 2020 வரை கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கான இழப்பீட்டு தொகையான ரூ. 36,400 கோடியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வழங்க அனுமதித்துள்ளது.


.

மூலக்கதை