தெலங்கானாவில் அதிகமான குழந்தை திருமணங்கள்: 16 வயது பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது தொடர்பாக போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு

தினகரன்  தினகரன்
தெலங்கானாவில் அதிகமான குழந்தை திருமணங்கள்: 16 வயது பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது தொடர்பாக போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் 16 வயது பெண்ணுக்கும் 23 வயது இளைஞருக்கும் இடையே திருமணம் நடைபெற்றது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத் அருகே  மெத்ஜால் மாவட்டத்தின் கந்தலகொயா கிராமத்தில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த திருமணத்தில் பங்கேற்றவர்கள் யாரும் முகக்கவசம் அணியாமல் மணமக்களைச் சுற்றி நின்றுள்ளனர்.இந்தத் திருமணம் தொடர்பாகக் குழந்தை திருமணம் தடுப்புப்பிரிவுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. தகவலின் அடிப்படையில் அவர்கள் சென்று விசாரித்ததில் மணமகளின் வயது 16 என்பது உறுதி செய்யப்பட்டது. இந்தச் சிறுமியை 23 வயது இளைஞருக்குத் திருமணம் செய்து வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மணப்பெண்ணின் பெற்றோர், மணமகனின் பெற்றோர் மற்றும் மணமகன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.அவர்கள் மீது போக்சோ, குழந்தைத் திருமணம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தைத் திருமணத்திற்கு எதிரான சட்டங்கள் இருக்கும் நிலையிலும் தெலங்கானாவில் அதிகமான குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை