ஆந்திர தலைமை செயலக ஊழியருக்கு கொரோனா: 2 பிளாக்குகள் மூடல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆந்திர தலைமை செயலக ஊழியருக்கு கொரோனா: 2 பிளாக்குகள் மூடல்

திருமலை: ஆந்திர மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த ஒருவாரமாக தலைமை செயலக ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு பணி புரியும் ஊழியர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஐதராபாத்தில் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் விஜயவாடாவுக்கு வரவழைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.

பின்னர் அங்கிருந்து சிறப்பு பேருந்து மூலம் குண்டூர் அடுத்த வெலகம்புடியில் உள்ள தலைமை செயலகத்திற்கு வந்து பணிபுரிந்து வந்தனர்.
தலைமை செயலகத்தின் 4வது பிளாக்கில் பணிபுரிந்து வந்த வேளாண் துறை ஊழியர் ஒருவருக்கு  கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் அந்த ஊழியர் பணிபுரிந்து வந்த 4வது பிளாக் மற்றும் கேன்டீன் செயல்பட்டு வந்த 3வது பிளாக் முற்றிலும் மூடப்பட்டது.

அங்கு பணிபுரிந்து வந்த ஊழியர்கள் அனைவரையும் வீட்டில் இருந்து பணிபுரியும்படி உத்தரவிடப்பட்டது.


தலைமை செயலக ஊழியருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் 15 நாட்கள் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கொரோனா அறிகுறி இருந்தால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை