ஜம்முவில் தடுப்பு காவலில் இருக்கும் ரோகிங்கியா அகதிகளை நாடு கடத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
ஜம்முவில் தடுப்பு காவலில் இருக்கும் ரோகிங்கியா அகதிகளை நாடு கடத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மியான்மரில் மதரீதியிலான துன்புறுத்தல்களால் அங்கிருந்து வெளியேறி இந்தியா வந்துள்ள ரோகிங்கியா முஸ்லிம் அகதிகள் பலர் ஜம்முவில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்கள் ஜம்முவில் இருந்த ரோகிங்கியா அகதிகள் முகாமில், போலீசாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இந்திய குடியுரிமை பெற தகுதியற்றவர்கள் மீண்டும் மியான்மருக்கு நாடு கடத்தப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே தலைமையிலான அமர்வில் நேற்று இது விசாரணைக்கு வந்தது.மனுதாரர்களின் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ‘ரோகிங்கியா சிறார்கள், மியான்மர் ராணுவத்தால் நடத்தப்படும் வன்முறை தாக்குதல், கொலை, துன்புறுத்தல் மற்றும் பாலியல் சுரண்டல்களால் பாதிக்கப்பட்டு அங்கிருந்து தப்பி அகதிகளாக இந்தியா வந்திருக்கின்றனர். அவர்களை நாடு கடத்தக் கூடாது,’ என வாதிட்டார். இதை ஏற்ற நீதிபதிகள், உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் இவர்களை நாடு கடத்தக் கூடாது என உத்தரவிட்டனர்.

மூலக்கதை