பணம் பறிமுதலில் தமிழகம் முதலிடம்

தினமலர்  தினமலர்
பணம் பறிமுதலில் தமிழகம் முதலிடம்

சென்னை :தமிழகம் உட்பட, தேர்தல்நடந்த ஐந்து மாநிலங்களிலும், 2016 தேர்தலின் போது பிடிபட்டதை விட, இந்த முறை, பல மடங்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பிடிபட்டுள்ளன. 446 கோடி ரூபாய் ரொக்கம், பொருட்கள் பிடிபட்டு, தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில், சட்டசபை தேர்தல் முடிந்துள்ளது. மேற்கு வங்கத்தில், எட்டு கட்டங்களாக ஓட்டுப்பதிவுநடைபெறுகிறது. இதுவரை மூன்று கட்ட ஓட்டுப்பதிவு முடிந்துள்ளது. ஐந்து கட்டம் நடைபெற வேண்டியுள்ளது.தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தப்பட்டது. வருமான வரித்துறையினர், சந்தேகத்திற்குரிய இடங்களில் சோதனை நடத்தினர்.

மூலக்கதை