இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 1,26,789 பேருக்கு கொரோனா.. 685 பேர் பலி. 59,258 பேர் குணமடைந்தனர்!!

தினகரன்  தினகரன்
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 1,26,789 பேருக்கு கொரோனா.. 685 பேர் பலி. 59,258 பேர் குணமடைந்தனர்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.67 லட்சத்தை நெருங்கியுள்ளது. அதே போல், பாதிப்பு 1.29 கோடியை  தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 1,26,789 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,29,28,574 ஆக உயர்ந்தது.* புதிதாக 685 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை  1,66,862 ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 59,258 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,18,51,393ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,10,319 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 91.67% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.29% ஆக அதிகரித்துள்ளது.* சிகிச்சை பெறுவோர் விகிதம் 7.04% ஆக அதிகரித்துள்ளது.* இதுவரை இந்தியாவில்  9,01,98,673 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 29,79,292 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை