23.79 லட்சம் பயனர்களை பெற்றது இ-நூலகம்

தினகரன்  தினகரன்
23.79 லட்சம் பயனர்களை பெற்றது இநூலகம்

பெங்களூரு: மாநிலத்தில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இ-நூலகத்தில் சுமார் 23.79 லட்சம் பேர் பதிவு செய்து பயனடைந்துள்ளனர் என பொதுநூலகதுறை தெரிவித்துள்ளது. மாநிலத்தில் பொதுமக்களிடம் படிக்கும் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி பொது இலவச இ-நூலகம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் கொரோனா தொற்று காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவர்களை தனிமையில் இருந்து காக்க இந்த இ நூலகம் பெரிதும் உதவியாக இருந்தது. இந்நிலையில் இதுவரை சுமார் 10.9 லட்சம் இ-புத்தகம் மற்றும் 5.49 லட்சம் வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநிலம் முழுவதும் சுமார் 23.79 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். மாநிலத்திலேயே அதிகபடியாக தென்கனரா மாவட்டத்தில் சுமார் 4.11 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.பெங்களூரு நகர்புறங்களில் 2.37 லட்சம் பேர் இ-நூலத்தில் பதிவு செய்து பயன்படுத்தி வருகின்றனர். பெங்களூரு நகரில் அதிக படியாக வடக்கு பகுதியில் 77,160 பேரும்,  கிழக்கு பகுதியில் குறைந்தபட்சமாக 7,956 பேரும் பதிவு செய்துள்ளனர். மாநிலத்திலேயே மிக குறைந்த பாட்சமாக குடகு மாவட்டத்தில் 1773 பேர் மட்டும் பதிவு செய்துள்ளதாக நூலகத்துறையின் தகவல் தெரிவிக்கிறது. பொது  நூலகங்கள் துறை இயக்குனர் சதீஷ் குமார் எஸ் ஹோசமணி கூறுகையில், இத்தகைய முறை பொதுமக்களிடையே படிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி முதல் 2021-ம் ஆண்டு ஜனவரி வரை 23 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பயன்பத்தியுள்ளது. மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் பொதுமக்களின் மேலும் மேம்படுத்தும் விதத்தில் புதிய புத்தகங்கள் பதிவேற்றப்படும். அதன் தரமும் பொதுமக்கள் படிக்க ஏற்றதாக இருக்க வேண்டும் எனவே பல ஆய்வுகளுக்கு பின்னரே பதிவிடப்படுகிறது என தெரிவித்தார்.

மூலக்கதை