அபிமன்யூ யானை உதவியுடன் புலியை தேடும் அதிகாரிகள்

தினகரன்  தினகரன்
அபிமன்யூ யானை உதவியுடன் புலியை தேடும் அதிகாரிகள்

குடகு: கிராம பகுதிகளில் சுற்றித்திரியும் புலியை பிடிக்க பல்வேறு இடங்களில் கூண்டு வைத்து கண்காணித்து வரும் வனத்துறை ஊழியர்கள் அபிமன்யூ யானையின் மீது அமர்ந்து வனப்பகுதிகளிலும், காபி தோட்டங்களிலும் புலியை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகா டி.ஷெட்டிகேரி அருகே சுற்றித்திரிந்து பொதுமக்களையும், கால்நடைகளையும் கொன்று வந்தது. கடந்த மூன்று நாட்களுக்கு முன் நிலத்தில் வேலை செய்து வந்த விவசாயி மீது புலி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து புலியை பிடிக்க அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்ததையடுத்து புலியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ஆனாலும் இதுவரை அவர்களின் கண்களில் சிக்காமல் புலி ஆட்டம் காட்டி வருகிறது.இந்நிலையில் புலியை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து வனப்பகுதிகளில் கூடாரம் அமைத்து இரவு பகல் பாராமல் காடு, மேடு, காபி தோட்டம் என பல இடங்களில் புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புலியை தேடும் பணியில் அபிமன்யூ யானையை ஈடுபடுத்தியுள்ள வனத்துறையினர் அதன் மீது அமர்ந்து பல்வேறு இடங்களில் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை