குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி போலீசில் 38 பேருக்கு பதக்கம்

தினகரன்  தினகரன்
குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி போலீசில் 38 பேருக்கு பதக்கம்

புதுடெல்லி: சிறப்பான சேவையாற்றிய டெல்லி காவல்துறைைய சேர்ந்த 38 பேருக்கு குடியரசு தினத்தையொட்டி நேற்று போலீஸ் பதக்கம் வழங்கப்பட்டதாக அதிகாரிகள்  தெரிவித்தனர். நாட்டின் 72வது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் முழு கோவிட் தடுப்பு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லி காவல் துறையில் சிறப்பான சேவைபுரிந்தவர்களுக்கு நேற்று 38 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. அவற்றில், 17 பேருக்கு போலீஸ் பதக்கங்களும், 3 பேருக்கு ஜனாதிபதி பதக்கம் மற்றும் மெச்சத்தகுந்த சிறப்பான பணிக்காக 18 பேருக்கு பதக்கமும் வழங்கப்பட்டன. அவர்களில், கடந்த 2018ம் ஆண்டு டெல்லி-என்சிஆரில் கிராந்தி கும்பலை கட்டுப்படுத்தி குற்றச்சம்பவங்களை ஒடுக்கியதற்காக டிசிபி சஞ்சீவ் குமார் யாதவ் மற்றும் அவரது சிறப்பு குழுவை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் பிரபாத்குமார் பங்கஜ், பங்கஜ் குமார்,  துணை ஆய்வாளர்கள் கிருஷன் குமார், நீரஜ் குமார் சர்மா, தலைமை கான்ஸ்டபிள்  கிர்தர் சிங் குர்ஜர் மற்றும் கான்ஸ்டபிள் குர்தீப் சிங் ஆகியோருக்கு துணிச்சலுக்கான பதக்கங்கள் வழங்கப்பட்டன.  மேலும், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படும்  யூசுப் கான் என்பவரை கடந்த ஆண்டு செப்டம்பரில் கைது செய்து  வெடிமருந்துகளை மீட்ட டிசிபி பிரமோத் சிங் குஷ்வா தலைமையிலான குழுவை சேர்ந்த ஏசிபி ஹிருதய பூஷண், எஸ்.ஐ. சந்தேஷ் கே மற்றும் ஏஎஸ்ஐ பூபேந்தர் குமார் ஆகியோருக்கு துணிச்சலுக்கான போலிஸ் விருதுகள் வழங்கப்பட்டன.இதேபோன்று கடந்த ஆண்டு ஜனவரியில் டெல்லியில் மூன்று  ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை கைது செய்ததற்காக டிசிபி பிரமோத் சிங் குஷ்வா  மற்றும் இன்ஸ்பெக்டர் வினோத் குமார் ஆகியோருக்கு பிஎம்ஜி விருது வழங்கப்பட்டது. இவர்கள் தவிர, டிசிபி ஜி ராம் கோபால் நாயக், ஏசிபி ராஜேஷ் குமார்,  இன்ஸ்பெக்டர் வினய் தியாகி மற்றும் கான்ஸ்டபிள் குல்தீப் சிங் ஆகியோர்  டெல்லி தொழிலதிபரின் ஐந்து வயது குழந்தையை 2018 ஆம் ஆண்டில் 11 நாட்கள் தேடுதலுக்கு பிறகு மீட்டதற்காக பிஎம்ஜி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும், சிறப்பு  சிபி நீரஜ் தாக்கூர், ஏசிபி ரித்தாம்ப்ரா பிரகாஷ் மற்றும் எஸ்ஐ  சுரேஷ்குமார் ஆகியோர் சிறப்பு சேவைக்கான ஜனாதிபதியின் போலீஸ் பதக்கம்பெற்றனர். அதேபோன்று டிசிபி  ராஜேஷ் தியோ, டிசிபி சஞ்சீவ் குமார் யாதவ், கூடுதல் டிசிபி ராஜேந்திர பிரசாத் மீனா, ஏசிபி அனில் சர்மா, இன்ஸ்பெக்டர்கள் மனீஷ் ஜோஷி, வினோத் நாரங் மற்றும் பிரதிபா சர்மா, ஏஎஸ்ஐ ரேகா மற்றும் மகாபீர் சிங் ஆகியோருக்கு சிறந்த சேவைக்கான போலீஸ் பதக்கம் வழங்கப்பட்டது.

மூலக்கதை