ஜெ., நினைவிடம் பிப்., 1ல் திறப்பு?

தினமலர்  தினமலர்
ஜெ., நினைவிடம் பிப்., 1ல் திறப்பு?


சென்னை :ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவை, பிப்ரவரி, 1ம் தேதி, பிரதமர் மோடி தலைமையில் நடத்த, முதல்வர் இ.பி.எஸ்., திட்டமிட்டு உள்ளார்.மறைந்த ஜெயலலிதாவின் உடல், சென்னை, மெரினாவில் உள்ள, எம்.ஜி.ஆர்., நினைவிடத்தின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, அதற்கு, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா நினைவிடம் என, அரசு பெயர் மாற்றியுள்ளது.
இங்கு, ஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணி மற்றும் எம்.ஜி.ஆர்., நினைவிடம் புனரமைப்பு பணி, 79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இறுதி கட்ட பணியை, முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் மூத்த அமைச்சர்கள், நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். நினைவிடம் திறப்பு விழாவுக்கு, பிரதமர் மோடியை அழைக்க, முதல்வர் இ.பி.எஸ்., திட்டமிட்டுள்ளார். இதற்காக, வரும், 18ம் தேதி டில்லி சென்று, பிரதமரை சந்தித்து அழைப்பு
விடுக்கிறார். திறப்பு விழா நடத்த, 27ம் தேதி மட்டுமின்றி, பிப்., 1ம் தேதி, 2ம் தேதி, 9ம் தேதி ஆகிய, நான்கு நாட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் ஒப்புதலை பெற்று, திறப்பு விழா தேதி உறுதி செய்யப்பட உள்ளதாக, அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மூலக்கதை