ஸ்டாலின் பாணியில் உதயநிதி: தேர்தல் பிரசாரத்தில் உளறல்

தினமலர்  தினமலர்
ஸ்டாலின் பாணியில் உதயநிதி: தேர்தல் பிரசாரத்தில் உளறல்

சென்னை : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பாணியில் அவரது மகன் உதயநிதியும் மேடையில் உளறியது சமூக வலைதளத்தில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.



தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவ்வப்போது மேடைகளில் பேசும்போது கவனக்குறைவால் உளறுவது வழக்கம். 'துண்டு சீட்டு இல்லாமல் ஸ்டாலின் பேசமாட்டார்' என அ.தி.மு.க. - பா.ஜ. உள்ளிட்ட கட்சியினர் அவரை விமர்சனம் செய்கின்றனர்.ஸ்டாலினின் பேச்சுகள் சமூக வலைதளங்களில் 'மீம்ஸ் வீடியோ' வடிவில் கிண்டலுக்கு ஆளாகி வருகிறது. தற்போது ஸ்டாலின் பாணியில் அவரது மகனும் தி.மு.க. இளைஞரணி செயலருமான உதயநிதியும் உளற ஆரம்பித்துள்ளார். அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இப்போதே உதயநிதி தேர்தல் பிரசாரத்தை துவங்கிவிட்டார்.


திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இரண்டு நாட்களாக போலீசாரின் தடையை மீறி அவர் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது ஒரு மேடையில் பேசிய உதயநிதி 'இங்கு கிடைக்கும் வரவேற்பை பார்க்கும்போது ஒன்று மட்டும் நிச்சயம்; 2001ல் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெறும். தி.மு.க. தலைவர் முதல்வர் ஆவார்' எனக் கூறினார். அடுத்தாண்டு 2021 தேர்தலை 2001 தேர்தல் என உதயநிதி உளறியதை கேட்டு தி.மு.க. தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது உதயநிதியின் உளறல்கள் 'மீம்ஸ் வீடியோ' என சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

மூலக்கதை