மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தரும்படி ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது :அமைச்சர் ஜெயக்குமார்

தினகரன்  தினகரன்
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தரும்படி ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது :அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை : 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தரும்படி ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னதாக மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதி இருந்தார். அதுகுறித்து முடிவெடுக்க இன்னும் 3-4 வாரங்கள் தேவை என்று ஆளுநர் விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில், இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ” 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தருமாறு ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்தோம். ஆனால் மசோதாவுக்கு ஒப்புதல் தருமாறு ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது. ஒரு அறைக்குள் நடந்த விவாதத்தை வெளியில் சொல்ல முடியாது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் தருவார்.7.5% உள் ஒதுக்கீடு ஒப்புதல் கிடைத்த பிறகே மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும். சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் அதிமுக அரசு செய்து வருகிறது. வன்னியர் சமூகத்துக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற பாமகவின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்; அது தொடர்பாக அரசு முடிவெடுக்கும்.” என்று கூறினார்.

மூலக்கதை