மலபார் கடற்படை பயிற்சி ஆஸி.யும் இணைந்தது

தினகரன்  தினகரன்
மலபார் கடற்படை பயிற்சி ஆஸி.யும் இணைந்தது

புதுடெல்லி: கடந்த 1992ம் ஆண்டு முதல் மலபார் எக்சர்சைஸ் என்ற கூட்டு கடற்படை போர் பயிற்சியில் அமெரிக்காவுடன் வருடந்தோறும் இந்தியா ஈடுபட்டு வருகிறது. இதில் 2015ம் ஆண்டு முதல் ஜப்பானும் இணைந்துகொண்டது. தற்போது இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று, ஆஸ்திரேலியாவும் இதில் பங்கேற்க உள்ளது. ‘மலபார் 2020’ என்ற கடற்படை போர் பயிற்சி அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் அடுத்த மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சீனாவுக்கான மறைமுக எச்சரிக்கையாகவும் இதன்மூலம் தனக்கு ஆதரவான ராணுவ அணியை இந்தியா உருவாக்க முயல்வதாகவும் சர்வதேச பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை