சிதம்பரம் மனு: இன்று விசாரணை

தினமலர்  தினமலர்
சிதம்பரம் மனு: இன்று விசாரணை

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதியை பெறுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்தில் நடந்த முறைகேட்டை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதில் அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த காங்.மூத்த தலைவர் சிதம்பரம் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. இரு வழக்குகள் டில்லி சி.பி.ஐ. தனி கோர்ட்டில் நடந்து வருகிறது.

சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கப்பட்டது. இதனையடுத்து, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமின் கேட்டு, டில்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.இவரது ஜாமின் மனு , இன்று விசாரணைக்கு வர உள்ளது. சிதம்பரத்துக்கு இன்று ஜாமின் கிடைத்தால், திகார் சிறையில் இருந்து வெளியே வரலாம்.


மூலக்கதை