'வாய்மையே வெல்லும்!' 3 முக்கிய வழக்குகளில் தீரப்பு

தினமலர்  தினமலர்
வாய்மையே வெல்லும்! 3 முக்கிய வழக்குகளில் தீரப்பு

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நாளை மறுநாள் ஓய்வு பெறப் போவதை அடுத்து மிக முக்கிய வழக்குகளை விசாரித்து தீர்ப்புகள் வழங்கி வருகிறார். நேற்று சபரிமலையில் பெண்கள் வழிபாடு நடத்த தடை கோரிய மனு, ரபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறிய மனு, கடந்த லோக்சபா தேர்தலின்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல், பா.ஜ.வைச் சார்ந்த பிரதமர் மோடியை 'காவலாளியே திருடன்' என மறைமுகமாகத் தாக்கிப் பேசியதை எதிர்த்த மனு ஆகியவற்றின் மீது தீர்ப்பு வழங்கினார்.

அதன்படி சபரிமலை விவகாரம் ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது; ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான மனு தள்ளுபடி செய்யப்பட்டது; 'பொறுப்பான பதவியில் இருப்பவர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும்போது வார்த்தைகளை இனி கவனமாகப் பயன்படுத்த வேண்டும்' என ராகுலுக்கு எச்சரிக்கை விடப்பட்டு அவருக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தேவையில்லாதது!

* ரபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்ட புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை.

* ஒப்பந்தம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் 2018 தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மனுதாரர் கோரியதிலும் எந்த முகாந்திரமும் இல்லை.

* ரபேல் ஒப்பந்தத்திற்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிய வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்படுகிறது.

விரிவான செய்திக்கு: https://www.dinamalar.com/news_detail.asp?id=2411634

7 நீதிபதி அமர்வு!

* கோவிலுக்குள் பெண்கள் நுழைய தடை விதிப்பது சபரிமலையில் மட்டுமல்ல; இன்னும் பல கோவில்களில் நடைமுறையில் உள்ளது.

* மதம் மற்றும் நம்பிக்கைகள் தொடர்பாக பல தரப்பட்ட விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* சபரிமலையில் பெண்கள் வழிபாடு நடத்த தடை மசூதிகளில் பெண்கள் வழிபாடு நடத்த தடை பெண்களின் பிறப்புறுப்பை சிதைப்பது ஆகிய மதம் தொடர்பான விஷயங்களை ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஆய்வு செய்து தீர்ப்பளிக்கும்.

விரிவான செய்திக்கு: https://www.dinamalar.com/news_detail.asp?id=2411654

கவனமா பேசுங்க!

* 'காவலாளியே திருடன்' என உச்ச நீதிமன்றம் சொன்னதாக ராகுல் பேசியது உண்மைக்குப் புறம்பானது. இது போன்ற கருத்துகள் தெரிவித்ததை ராகுல் தவிர்த்திருக்க வேண்டும்; கவனமாக இருந்திருக்க வேண்டும்.

* ஒரு விவகாரத்தைப் பற்றி கருத்து தெரிவிக்கும்போது உண்மை நிலையை ஆராயாமல் பேசுவது துரதிருஷ்டவசமானது.

* நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு தனக்கு எதிரான மனுவை நிராகரிக்குமாறு ராகுல் கோரிக்கை விடுத்துள்ளதை அடுத்து அவருக்கு எதிரான வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

விரிவான செய்திக்கு: https://www.dinamalar.com/news_detail.asp?id=2411637

மூலக்கதை