சர்ச்சைக்குரிய நினைவுத் தூண்; பாக்., சேட்டை

தினமலர்  தினமலர்
சர்ச்சைக்குரிய நினைவுத் தூண்; பாக்., சேட்டை

புதுடில்லி: பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள தர்பார் சாகிப் குருத்வாரா அருகே பாக்., அரசு சார்பில், சர்ச்சைக்குரிய நினைவுத் தூண் மற்றும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க கர்தார்பூர் சாலை திட்டத்தை பிரதமர் மோடி, இன்று(நவ.,9) திறந்து வைக்கிறார். கர்தார்பூரில் உள்ள, தர்பார் சாகிப் குருத்வாரா அருகே, பாக்., அரசு சார்பில், ஒரு நினைவுத் துாணும், ஒரு போர்டும் வைக்கப்பட்டுள்ளன. அந்த நினைவுத் துாணின் மேல் பகுதியில், கண்ணாடி கூண்டு அமைத்து, அதற்குள், சிறிய வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள போர்டில், அதுகுறித்த விபரம் எழுதப்பட்டுள்ளது.


அதில், 'கடந்த, 1971ல், தர்பார் சாகிப் குருத்வாராவை அடியோடு அழிக்கும் வகையில், இந்திய விமானப் படை, இந்த வெடி குண்டை வீசியது. இறைவன் அருளால், குருத்வாராவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை' என, விஷமத்தனமாக எழுதப்பட்டுள்ளது.

சமீபத்தில், காலிஸ்தான் பயங்கரவாதியான, மறைந்த பிந்தரன்வாலேயின் புகைப்படம் அடங்கிய போஸ்டர்கள், குருத்வாரா அருகே ஒட்டப்பட்டிருந்தன. தற்போது, இந்த சர்ச்சைக்குரிய நினைவுத்துாண் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை