முதல்வருக்கு தெரியாமல் புதுச்சேரி ராஜ்நிவாசுக்கு மாறுவேடத்தில் வரும் அமைச்சர்கள்: கிரண்பேடி தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
முதல்வருக்கு தெரியாமல் புதுச்சேரி ராஜ்நிவாசுக்கு மாறுவேடத்தில் வரும் அமைச்சர்கள்: கிரண்பேடி தகவல்

புதுச்சேரி: முதல்வருக்கு தெரியாமல் ராஜ்நிவாசுக்கு மாறு வேடத்தில் அமைச்சர்கள் வருவதாக அம்மாநில கவர்னர் கிரண்பேடி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், கிரண்பேடியை விமர்சித்து முதல்வர் பேட்டி அளித்தபோது, ‘’கவர்னர் அன்றாட அரசு நிர்வாகத்தில் தலையிடக்கூடாது. முதல்வர், அமைச்சர்கள் உத்தரவின்படி தலைமை செயலர், அரசு செயலர்கள் செயல்பட வேண்டும்.

கவர்னர் உத்தரவை செயல்படுத்த கூடாது. அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவு போட கவர்னருக்கு அதிகாரம் கிடையாது.



நீதிமன்ற உத்தரவை மீறி கவர்னர் செயல்பட்டு வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு, முன் இது தொடர்பாக கவர்னருக்கு கடிதம் அவருக்கு அனுப்பியிருக்கிறேன்’ என்றார்.


இந்த நிலையில், நேற்று இரவு கவர்னர் கிரண்பேடி, முதல்வருக்கு பதில் கேள்வி எழுப்பி சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: உண்மையில் விதிகள் இருவருக்கும் பொருந்தும். மோசமான மொழியிலும் கேவலமான சுவரொட்டிகள் மற்றும் பொய்களும் இவ்விதிகளின் ஒருபகுதியாக இல்லை.

யார் இதை செய்கிறார்கள்? ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாசில் நடைபெறும் நிகழ்வுகளுக்கோ, சந்திப்புகளுக்காகவோ அமைச்சர்கள் வர விரும்பும்போது கூட பின்னணியில் இருந்து தடுப்பவர்கள் யார்? இரவில் ஸ்கூட்டரில் அமைச்சர்கள் தங்களை மறைத்து கொண்டு வந்து தாங்கள் வந்ததை தெரியப்படுத்த வேண்டாம் என்கிறார்கள்.

இது என்ன விதிகள் என்று கேள்வி எழுகிறது.

குறைகளை நிவர்த்தி செய்யவும், மக்களுக்கு நிவாரணம் தரவும், தகவல் தொடர்பு சாதனங்களை ஒரு பகுதியாக இருக்கக்கூடாது என்று அதிகாரிகளை வழிநடத்துகிறார்கள் என்று முதல்வருக்கு கவர்னர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வருக்கு தெரியாமல் அமைச்சர்கள் ராஜ்நிவாஸ் சென்று வருவதாக கவர்னர் பகிரங்கமாக கூறியிருப்பது, புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை