சமையல் செய்து கொண்டிருந்த போது காஸ் சிலிண்டர் வெடித்து 10 பேர் பலி: உத்தரபிரதேசத்தில் சோகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சமையல் செய்து கொண்டிருந்த போது காஸ் சிலிண்டர் வெடித்து 10 பேர் பலி: உத்தரபிரதேசத்தில் சோகம்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் சமையல் செய்து கொண்டிருந்த போது காஸ் சிலிண்டர் வெடித்ததில், 10 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம், மவு அடுத்த முகமதுபாத் என்ற 2 மாடி குடியிருப்பில் பெண் ஒருவர், இன்று காலை 7. 30 மணியளவில் காஸ் சிலிண்டர் மூலம் உணவு சமைத்துக்கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. பெரும் சத்ததுடன் அக்கம் பக்கத்தினர் அலறியறித்துக் கொண்டு ஓடினர்.

சிலிண்டர் வெடித்ததால் இரு கட்டிடங்கள் இடிந்து சரிந்தன. இதனால் இடிபாடுகளில் சிக்கிய 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்த போலீசார் இடிபாடுகளில் காயத்துடன் சிக்கியவர்களை மீட்டு, மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மீட்பு நடவடிக்கைகளில் உள்ளூர் போலீசாரும், மக்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து, ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில், ‘‘காஸ் கசிவால் சிலிண்டர் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம்.

ெதாடர்ந்து விசாரணை நடக்கிறது. 10 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

30 பேர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்’ என்றார். இந்த சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, கூடுதல் தலைமை செயலாளர் (உள்துறை) அவனிஷ் கூறுைகயில், “உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த சம்பவத்தை அறிந்து, இறந்தவரின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குமாறு முதல்வர் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்” என்றார்.

.

மூலக்கதை