இந்திய-சீன தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடிவருகிறார்கள்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
இந்தியசீன தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடிவருகிறார்கள்

அக்டோபர்,12 2019:  உலகின் அதிக மக்கள்தொகையும் , மனித வளமும், வரலாற்றுத் தொடர்புகளும், கலாச்சார நெருக்கமும் உள்ள இந்திய-சீன தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடிவருகிறார்கள்.

இந்த சந்திப்பு, இந்தியாவின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதாகவும், இருநாட்டு உறவை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்ல உதவுவதாதாகவும் இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் பிரதமர் திரு.நரேந்த்திர மோதி அவர்கள் தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி , சட்டை, துண்டில் கலந்துகொண்டது தமிழகத்தின் கலாச்சாரத்தை போற்றுவதாக அமைந்தது.

உலகெங்கும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் சந்திப்பது தமிழகத்தின் பாரம்பரியம், மொழி, உடை, கலாச்சாரம் ஆயவற்றை உலகம் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமையும்.

இரு தலைவர்களின் கூட்டறிக்கை வழியே அவர்கள் என்ன உரையாடினார்கள் என்பது குறித்து அறிந்துகொள்ள உலகம் ஆவலுடன் உள்ளது.

 

அழகான மகாபலிபுரத்தின் புகைப்படங்களைக் காண:

http://www.valaitamil.com/tamilnadu-mahabalipuram-photopg257-302-1

மூலக்கதை