பஞ்சாப் - மராட்டிய கூட்டுறவு வங்கி முறைகேடு: ரிசர்வ் வங்கி அதிகாரத்தின் படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது... நிர்மலா சீதாராமன் விளக்கம்

தினகரன்  தினகரன்
பஞ்சாப்  மராட்டிய கூட்டுறவு வங்கி முறைகேடு: ரிசர்வ் வங்கி அதிகாரத்தின் படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது... நிர்மலா சீதாராமன் விளக்கம்

டெல்லி: பஞ்சாப் - மராட்டிய கூட்டுறவு வங்கி முறைகேடு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். வீட்டு வசதி மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு  நிறுவனமான எச்.டி.ஐ.எல்-லிற்கு கடன் வழங்கியதில் நடந்த முறைகேடு குறித்து மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து எச்.டி.ஐ.எல் நிறுவனத்தின் இயக்குநர்களாக ராகேஷ் மற்றும் சரண் பதாவன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருந்த ஜாய் தாமசும் கைது செய்யப்பட்டார். அவரது நான்கு சொத்துக்கள் முடக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் - மராட்டிய கூட்டுறவு வங்கி முறைகேடு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். கூட்டுறவு வங்கி செயல்பாடுகளை நிதியமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. பஞ்சாப் - மராட்டிய கூட்டுறவு வங்கி பிரச்சனை குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநரிடம் மீண்டும் பேச உள்ளேன். வங்கிகளில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் உள்ளது. ரிசர்வ் வங்கி அதிகாரத்தின் படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பஞ்சாப் - மராட்டிய கூட்டுறவு வங்கி முறைகேடால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை சந்தித்து பேசியதாஜ விளக்கம் அளித்துள்ளார். முறைகேடு செய்த வங்கி மேலாளர்களுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கூட்டுறவு வங்கிகளை முறைப்படுத்தும் விதிமுறைகளை ஆராய்ந்து வருவதாகவும் கூறினார். கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு நடைபெறாமல் தடுக்க சட்டங்களில் திருத்தம் கொண்டுவரப்படும். மோசடி தொடர்பாக நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பி.எம்.சி. வங்கி முறைகேட்டிற்கும் நிதி அமைச்சகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

மூலக்கதை