ரூ.76 ஆயிரம் கோடி வாராக்கடன் தள்ளுபடி

தினமலர்  தினமலர்
ரூ.76 ஆயிரம் கோடி வாராக்கடன் தள்ளுபடி

புதுடில்லி: நாட்டின் மிகப் பெரிய வங்கியான, பாரத ஸ்டேட் வங்கி, 76 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் வாராக்கடன்களை தள்ளுபடி செய்துள்ளது.


வாராக்கடன்கள் குறித்து, தனியார் செய்தி சேனல் சார்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு, ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது. அதில், இந்தாண்டு மார்ச் வரையிலான காலத்தில், பாரத ஸ்டேட் வங்கி சார்பில், 76 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடன்கள், 100 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியிருந்த, 220 வங்கி கணக்குகளுக்கு உரியவை என்றும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல், இந்த குறிப்பிட்ட காலத்தில், பஞ்சாப் நேஷனல் வங்கி, 100 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியிருந்த, 94 வங்கி கணக்குகளுக்கு உரிய, 27 ஆயிரம் கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை