இஸ்ரேல் பயணம்: ஸ்டாலின் கிண்டல்

தினமலர்  தினமலர்
இஸ்ரேல் பயணம்: ஸ்டாலின் கிண்டல்

சென்னை : முதல்வர் பழனிசாமி உள்ளூரில் உள்ள நீரைச் சேமிக்க முடியாமல், கடலில் கலக்க அனுமதித்து விட்டு, உலக சுற்றுலாவின், ஒரு பகுதியாக, இஸ்ரேல் போவதாகக் கூறுவது, வேடிக்கையாக உள்ளது' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: 'நீர் சிக்கனம் பற்றி அறிய, இஸ்ரேலுக்கு செல்கிறேன்' என, முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். அவர், கொள்ளிடம் ஆற்றிலிருந்து, கடலில் கலக்கும், 20 ஆயிரம் கன அடி தண்ணீர் பற்றி கவலைப்படாதது, வேதனை அளிக்கிறது. கொள்ளிடத்தில், கடந்த ஆண்டு, 100 டி.எம்.சி.,க்கு மேல்தண்ணீர், கடலில் வீணாக கலந்தது. இந்த முறை, 10 ஆயிரம் முதல், 20 ஆயிரம் கன அடி தண்ணீர் கலந்து வருகிறது.

வேளாண்மைக்கும், குடிநீருக்கும் பயன்பட வேண்டிய தண்ணீர், இப்படி பயனற்று போகிறது.உள்ளூரில் நீரைச் சேமிக்க முடியாமல், கடலில் கலக்க அனுமதித்து விட்டு, உலக சுற்றுலாவின், ஒரு பகுதியாக, 'இஸ்ரேல் போகிறேன்' என்பது, வேடிக்கையாக இருக்கிறது. ஜெயலலிதா அறிவித்த, கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தையாவது, இ.பி.எஸ்.பழனிசாமி, அரசு, விரைவில் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை