இந்திய பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது: ப.சிதம்பரம் டிவிட்

தினகரன்  தினகரன்
இந்திய பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது: ப.சிதம்பரம் டிவிட்

டெல்லி: இந்திய பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற அனுமதி வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ காவல் முடிந்ததை அடுத்து அவர் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்தினர் மூலமாக, டிவிட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் சில தகவல்களை பதிவிட்டு வருகிறார். இதனிடையே இந்தியாவில் கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துள்ளது. இது, அரசின் பல்வேறு துறைகளிலும் எதிரொலிக்கிறது. இதனை சரிசெய்வதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பொருளாதார மந்தநிலையை எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக ப.சிதம்பரத்தில் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்; இந்திய பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. முடங்கி கிடைக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசிடம் உள்ள திட்டம் என்ன என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். பொருளாதார சரிவால் முதலீடுகள், வேலைவாய்ப்பு, வர்த்தகம் குறைந்து நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வருமானம் குறைந்துள்ளதால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது ஏழைகள் தான். நீடில் பொருளாதார நிலை குறித்தும் தான் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை