இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பு வீண் போகாது: ராகுல் காந்தி டிவிட்டரில் கருத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பு வீண் போகாது: ராகுல் காந்தி டிவிட்டரில் கருத்து

சென்னை: சந்திரயான் 2 மிஷனின் விக்ரம் லேண்டர் உடனான தகவல் தொடர்பு கிடைக்காத நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பு வீண் போகாது என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். சந்திரயான் 2ன் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக விக்ரம் லேண்டர் ராக்கெட் மோட்டரை இயக்கி, நிலவுக்கு செல்லும் வேகத்தை இயக்கி மெல்ல மெல்ல குறைத்து நிலவின் தரைப்பகுதியை தொடுவது தான் மிகவும் சவாலானது. அந்த 15 நிமிடங்கள் மிகவும் சவாலானது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் ஏற்கனவே கூறியிருந்தனர். இந்நிலையில் விக்ரம் லேண்டர் தரையை நோக்கி சென்று கொண்டிருந்த போது, லேண்டருடனான தகவல் தொடர்பு சிக்னல் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இதுதொடர்பாக ராகுல் காந்தி டிவிட்டரில் கூறியுள்ளதாவது:அளப்பறிய பணிகளை செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்.

உங்களின் அர்ப்பணிப்பு உணர்வு இந்திய மக்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. உங்கள் உழைப்பு வீண் போகாது.

இது இனி வரும் காலங்களில் இந்திய விண்வெளி ஆய்வுத்துறையில் புதிய உச்சங்களை தொடுவதற்கான தொடக்கம்.

இவ்வாறு ராகுல் காந்தி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை