கேரளாவில் மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு: பினராய் விஜயன்

தினகரன்  தினகரன்
கேரளாவில் மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு: பினராய் விஜயன்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கேரளாவில் இன்று (நேற்று) 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் மட்டுமே வெளிநாட்டில் இருந்து வந்தவர். எஞ்சிய 11 பேருக்கும் நோய் பாதித்தவர்களுடனான தொடர்பினால் நோய் பரவியுள்ளது. இதுவரை 357 பேருக்கு நோய் பரவியுள்ளது.  தற்போது 258 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  காசர்கோடு மாவட்ட எல்லை வழியாக கர்நாடகாவிற்கு நோயாளிகளை சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியாதநிலை உள்ளது. இன்றும் சிகிச்சை கிடைக்காமல் ஒருவர் இறந்துள்ளார். எனவே இதை தடுக்க கேரளாவின் மற்ற பகுதிகளில் இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கேரளாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இன்றுடன் 100 நாட்கள் ஆகிறது. இந்த நாளில் வெளிநாட்டை சேர்ந்த 8 பேர் குணமடைந்துள்ளனர் என்பது நமது சுகாதாரத்துறையினரின் சாதனையாகும்.  ஊரடங்கு சட்டம் அமலில் இருப்பதால் மாணவர்கள் வசதிக்காக புத்தக கடைகளை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும். உரக்கடைகள் தினமும் காலை 7 முதல் 11 மணிவரை திறக்க அனுமதிக்கப்படும்.  தையல், நகை தொழிலாளர்கள், விவசாய ெதாழிலாளர்கள், உட்பட நல வாரியம் மூலம் 1000 ரூபாய் வழங்கப்படும். 50 ஆயிரம் லாட்டரி தொழிலாளர்களுக்கு தலா ₹1000 வழங்கப்படும். 1.5 லட்சம் மீன்பிடி தொழிலாளர்களுக்கு ₹2 ஆயிரம் வழங்கப்படும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை