மகாராஷ்டிராவில் மேலும் 208 பேருக்கு கொரோனா தொற்று மும்பையில் ஒரேநாளில் 9 பேர் பலி: புனேயில் மேலும் 3 பேர் சாவு

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராவில் மேலும் 208 பேருக்கு கொரோனா தொற்று மும்பையில் ஒரேநாளில் 9 பேர் பலி: புனேயில் மேலும் 3 பேர் சாவு

மும்பை: மும்பையில் கொரோனா வைரசுக்கு நேற்று ஒரேநாளில் மேலும் 9 பேர் பலியானார்கள்.       மும்பையில் கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை அந்த வைரசுக்கு மும்பையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 696 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 59 ஆகவும் இருந்தது. நேற்று மும்பையில் மேலும் 79 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 775 ஆக அதிகரித்தது. நேற்று ஒரேநாளில் மேலும் 9 பேர் இந்த கொடிய வைரசுக்கு பலியானதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்து. இதன் மூலம் மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,343 ஆக அதிகரித்தது. புனேயில் நேற்று கொரோனா வைரசுக்கு மேலும் 3 பேர் பலியானார்கள். இதன் மூலம் புனேயில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.இதற்கிடையே, தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை தாராவியில் 3 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா தொற்று தாராவியில் சமூக பரவலாக மாறும் அபாயம் இருப்பதால் தாராவி முழுவதையும் சீல் வைக்க வேண்டும் என்று சிவசேனா எம்.பி.  ராகுல் ஷெவாலே மற்றும் மேயர் கிஷோரி பெட்னேகர் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.  இந்த நிலையில், நேற்று மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ராகுல் ஷெவாலே, கிஷோரி பெட்னேகர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது தாராவியில் வசிக்கும் அனைவரையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துவது என முடிவு செய்யப்பட்டதாக ராகுல் ஷெவாலே கூறினார்.

மூலக்கதை