உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்தது..அதிகப்பட்சமாக இத்தாலியில் 16,523 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்தது..அதிகப்பட்சமாக இத்தாலியில் 16,523 பேர் உயிரிழப்பு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 74,647 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 1,345,751 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 278,428 பேர் குணமடைந்தனர். மேலும் 47,517 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 205 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 16,523 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 132,547 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 13,341 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 136,675-ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 10,871 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 367,004 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1,255 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,373 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,608 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4281 ஆக அதிகரித்துள்ளது.  இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது.  இந்தியாவில் 318 பேர் குணமடைந்தனர். பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,911 அதிகரித்துள்ளது. கொரோனாவால் ஈரானில் 3,739 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சீனாவில் 81,708 பேருக்கும், ஜெர்மனியில் 103,374 பேருக்கும், பிரான்சில் 98,010 பேருக்கு கொரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 636 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 833 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 700 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 612- ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை