டெல்லி கூட்டத்தால் கொரோனா வைரஸ் ஒழிப்பு போராட்டத்தில் பின்னடைவு: ஜனாதிபதி வேதனை

தினகரன்  தினகரன்
டெல்லி கூட்டத்தால் கொரோனா வைரஸ் ஒழிப்பு போராட்டத்தில் பின்னடைவு: ஜனாதிபதி வேதனை

டெல்லி கூட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆங்காங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கண்டறியப்பட்டு, தனிமை வார்டில் வைத்து கண்காணிக்கப்படுகின்றனர். இந்நிலையில், அனைத்து மாநில ஆளுநர்களுடன் காணொளி காட்சி மூலமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று, கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். அவர்களிடம் பேசிய அவர், ‘‘டெல்லி ஆனந்த் விகாரில் குவிந்த வெளி மாநில தொழிலாளர்கள், நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டவர்களால் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், போலீசார் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களும் கவலை அளிக்கின்றன. முடக்க காலத்தில் யாரும் பட்டினியாக இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்,’’ என்றார்.

மூலக்கதை