பாதிப்பு எண்ணிக்கை 295 ஆனது கேரளாவில் மேலும் 9 பேருக்கு தொற்று: 1.70 லட்சம் பேர் கண்காணிப்பு

தினகரன்  தினகரன்
பாதிப்பு எண்ணிக்கை 295 ஆனது கேரளாவில் மேலும் 9 பேருக்கு தொற்று: 1.70 லட்சம் பேர் கண்காணிப்பு

கேரளாவில் நேற்று மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 295 ஆக உயர்ந்துள்ளது.இது பற்றி திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கேரளாவில் இன்று மேலும் 9 ேபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் காசர்கோடு மாவட்டத்தில் 7 பேர், திருச்சூர், கண்ணூர் மாவட்டங்களில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்று  திரும்பியவர்கள். இந்த மாநாட்டில் கேரளாவில் இருந்து பங்கேற்ற அனைவரும்  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.தற்போது 257 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று (நேற்று) கோட்டயத்தை சேர்ந்த வயதான தம்பதி, அவர்களுக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் உட்பட 14 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, மருத்துவமனை மற்றும் வீடுகளில் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 997 பேர் கண்காணிப்பில் உள்ளனர். கேரளாவில் தறபோது அமலில் உள்ள முடக்கம் குறித்து ஆய்வு நடத்த முன்னாள் தலைமை செயலாளர் ஆபிரகாம் தலைமையில் 17 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.‘தமிழக எல்லையை மூட மாட்டோம்’கேரள முதல்வர் பினராய் விஜயன், திருவனந்தபுரத்தில் நேற்று அளித்த பேட்டி:   கேரள எல்லையை கர்நாடக அரசு மண் போட்டு மூடியதுபோல், தமிழகத்தில் கொேரானா நோயாளிகள் அதிகரித்து வருவதால் தமிழக எல்லையில் கேரளா மண்ணை போட்டு மூடியிருப்பதாக சமூக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. இது தவறான தகவல். எந்த காரணம் கொண்டும் எந்த மாநில எல்ைலயையும் கேரளா மூடாது. முடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளதால் யார் எங்கு இருக்கிறார்களோ, அங்கேயே இருக்க வேண்டும். கேரளாவில் தற்போது பல்வேறு நிறுவன பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் வதிக்காக பிஎஸ்என்எல் ஒரு மாதத்திற்கு இலவச பிராட்பேண்ட் வசதி ஏற்படுத்த முன் வந்துள்ளது. தினமும் 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தற்போது பிராட்பேண்ட் இணைப்பு இருப்பவர்களுக்கும் புதிய இணைப்பு எடுப்பவர்களுக்கும் இது பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்.விரைவு பரிசோதனைகொரோனா வைரஸ் பரிசோதனை முடிவு வருவதற்கு தற்போது ஒரு சில நாட்கள் வரை ஆகிறது. ஆனால், பிசிஆர் கருவி மூலம் நடத்தப்படும் விரைவு  பரிசோதனை முடிவு இரண்டரை மணி நேரத்தில் கிடைக்கும். இதனால், கேரளாவில் இந்த விரைவு பரிசோதனைக்காக ஆயிரம் உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன.

மூலக்கதை