கொரோனா வைரசுக்கு எதிராக சிறந்ததோர் தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
கொரோனா வைரசுக்கு எதிராக சிறந்ததோர் தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அறிவிப்பு

வாஷிங்டன் : கொரோனா வைரசுக்கு எதிராக சிறந்ததோர் மருந்தை கண்டுபிடித்துள்ளதாக பிரபல மருந்து நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு தங்கள் நிறுவனம் தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சிக்காக அமெரிக்க அரசுடன் இணைந்து சுமார் ரூ. 7000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.வரும் செப்டம்பர் மாதம் இந்த தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு வழங்கி சோதனை செய்து பார்க்கப்படும் எனவும் அதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அங்கீகாரம் பெற்று இந்த மருந்து பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆராய்ச்சி பணிக்காக செலவிடப்பட்ட தொகையை தவிர வேறு எந்த லாபத்திற்கும் இந்த தடுப்பு மருந்து விற்கப்பட மாட்டாது என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கூறியுள்ளது.இந்த ஆராய்ச்சிக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்யப்பட்டுள்ளது. இதே ஆராய்ச்சி முறைதான் எபோலா , சிகா வைரஸ், எச்ஐவி மருந்து ஆகியவற்றை தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாகவும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.  அதே போல் அமெரிக்க மருந்து பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமான அபோட் தாங்கள் கண்டுபிடித்த கொரோனா சோதனை கருவி விரைவில் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளது.

மூலக்கதை