மார்ச் 3ம் தேதி நெருங்குவதால் 4 தூக்கு தண்டனை குற்றவாளிகளின் நடத்தை தீவிர கண்காணிப்பு: குடும்ப உறுப்பினர்களை சந்திக்க ஏற்பாடு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மார்ச் 3ம் தேதி நெருங்குவதால் 4 தூக்கு தண்டனை குற்றவாளிகளின் நடத்தை தீவிர கண்காணிப்பு: குடும்ப உறுப்பினர்களை சந்திக்க ஏற்பாடு

புதுடெல்லி: மார்ச் 3ம் தேதி நெருங்குவதால் 4 தூக்கு தண்டனை குற்றவாளிகளின் நடத்தை தீவிர கண்காணிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி நிர்பயா தூக்கு தண்டனை 4 குற்றவாளிகளின் குடும்பத்தினருடனான கடைசி சந்திப்பு தொடர்பாக குற்றவாளிகள் 4 பேருக்கும் திகார் சிறைத்துறை கடிதம் எழுதியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், தங்களது குடும்பத்தினரை எப்போது சந்திக்க விரும்புகிறீர்கள்? என்று 4 பேரின் விருப்பத்தை கேட்டு சிறை நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது.

தங்களது குடும்பத்தினரை பிப். 1ம் தேதி ஏற்கனவே சந்தித்து விட்டதாக சிறைத்துறைக்கு குற்றவாளிகள் முகேஷ், பவன் ஆகியோர் பதில் தெரிவித்துள்ளனர்.

எஞ்சிய குற்றவாளிகள் அக் ஷய், வினய் சர்மா ஆகியோரிடமும், தங்கள் விருப்பத்தை கூறுமாறு சிறைத்துறை தெரிவித்துள்ளது.

மரண தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், நான்கு குற்றவாளிகளும் தூக்கிலிடப்படுவதைத் தவிர்ப்பதற்கு வெவ்வேறு முறைகளைப் பின்பற்றுகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரும் தப்பிக்க வெவ்வேறு தந்திரங்களை பயன்படுத்துகின்றனர். பிப்.

16 அன்று, நான்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் குமார் சர்மா சுவரில் தலையை அடித்து காயப்படுத்திக் கொண்டார். இப்போது, ​​தனது வழக்கறிஞர் மூலம், டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் தனது மனநிலை சரியில்லை என்று கூறி மனு தாக்கல் செய்துள்ளார்.

நிர்பயாவின் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட மரண உத்தரவின்படி, மார்ச் 3ம் தேதி, நான்கு குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட வேண்டும்.   மார்ச் 3ம் தேதி நெருங்கி வருவதால், சிறை துறை நிர்வாகம் குற்றவாளிகளின் நடத்தை குறித்து கண்காணித்து வருகிறது. அவர்களின் நடத்தை இயல்பாக இருக்க, நான்கு குற்றவாளிகளுக்கும் ஆலோசனை வழங்கப்படுகிறது.

வினய் தனது தாயை கடந்த திங்கள்கிழமை சந்தித்ததாக சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


.

மூலக்கதை