ஆம் ஆத்மி மூத்த தலைவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார் டெல்லி மகளிர் ஆணைய தலைவி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆம் ஆத்மி மூத்த தலைவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார் டெல்லி மகளிர் ஆணைய தலைவி

புதுடெல்லி: ஆம் ஆத்மி மூத்த தலைவரிடம் இருந்து டெல்லி மகளிர் ஆணைய தலைவி விவாகரத்து பெற்றார். டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் (35).

இவர் மகளிருக்கான கமிஷனராக நியமிக்கப்பட்டபோது, ​​அவர் மிகவும் இளம் பெண் கமிஷனராக இருந்தார். மேலும், அவர் தனது கணவரான ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான நவீன் ஜெய்ஹிந்த் செல்வாக்கில் அந்த பதவியைப் பெற்றதாக குற்றச்சாட்டு இருந்தது.

சுவாதியின் கணவர் நவீன், அரியானா மாநில ஆம் ஆத்மி கட்சியின் தலைவராக உள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பல்வேறு போராட்டங்களில் சுவாதி பங்கேற்றார்.



ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தின் போது கெஜ்ரிலால், சுவாதி மாலிவால், நவீன் ஜெய்ஹிந்த் ஆகியோர் ஒன்றாக பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு, பெண்கள் பாலியல் பலாத்காரம் தொடர்பாக நவீன் ஒரு மோசமான கருத்தை தெரிவித்ததால், இவர்களது திருமண உறவில் பிரச்னை உருவானது.

அதனால், இருவருக்குள்ளும் கருத்து மோதல்கள் உருவாகி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் நவீனிடம் இருந்து சுவாதி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார்.

தற்போது, நவீனிடம் இருந்து விவாகரத்து பெற்று விட்டதாக சுவாதி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து சுவாதி வெளியிட்ட ட்விட்டில், ‘சில நேரங்களில் சிறந்தவர்கள் ஒன்றாக இருக்க முடியாது.



இதுபோன்ற வலியை  சமாளிக்க எங்களுக்கும் எங்களைப் போன்ற மற்றவர்களுக்கும் பலம் அளிக்கும்படி  தினமும் கடவுளை பிரார்த்திக்கிறேன். உங்கள் விசித்திரக் கதை முடிவடையும் போது மிகவும் வேதனையாக இருக்கும்.

என்னுடையது கதை முடிந்தது. நவீனும் நானும் விவாகரத்து செய்துள்ளோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

இவரது டிவிட்டுக்கு பலரும் பாராட்டும், துணிச்சலான முடிவு என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


.

மூலக்கதை