ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நள்ளிரவு முதல் 20 மாவட்டத்தில் இணைய சேவை: பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் இயங்காது

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜம்மு  காஷ்மீர் மாநிலத்தில் நள்ளிரவு முதல் 20 மாவட்டத்தில் இணைய சேவை: பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் இயங்காது

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நள்ளிரவு முதல் 20 மாவட்டத்தில் இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் செயல்பாடு தொடர்ந்து தடையில் உள்ளது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், கடந்த 5 மாதங்களுக்கு பின்னர் குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் 20 மாவட்டங்களில் இணைய சேவைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் மாநிலம் முழுவதும் 20 மாவட்டங்களில் 2 ஜி மொபைல் இணைய சேவைகள் வழங்கப்பட்டன.

இருப்பினும், இணைய கட்டுப்பாடுகள் ஓரளவு நீடிக்கிறது.

இணைய சேவைகளின் மூலம் 301 வலைத்தளங்களை மட்டுமே மக்கள் பயன்படுத்த முடியும்.

இது தவிர, சமூக ஊடக பயன்பாடுகளின் பயன்பாடுக்கான தடை நீக்கப்படவில்லை. ஜம்மு-காஷ்மீரின் உள்துறை நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, தொலைபேசிகளில் 2ஜி வேகத்துடன் இணைய வசதி தொடங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பள்ளத்தாக்கில் உள்ளவர்கள் சமூக ஊடக தளங்களை பயன்படுத்த முடியாது. அங்கீகரிக்கப்பட்ட வலைத்தளங்களில்  வங்கி, கல்வி, செய்தி, பயணம், வசதிகள் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய சேவைகள் பெறலாம்.

போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளில் தரவு வசதி கிடைக்கும்.

மொபைல் போன்களில் 2ஜி இணைய வசதி ஜன.

31ம் தேதி வரை செயல்படும் என்றும், அதன் பின்னர் அது மதிப்பாய்வு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இணைய சேவைகள் ஓரளவு வழங்கப்பட்ட நிலையில், பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற தளங்களின் பயன்பாடு தடை நீடிக்கிறது.

உள்துறை நிர்வாக வட்டாரங்களின்படி, நிலைமைகள் இயல்பாக இருந்தால், வரும் நேரத்தில் பள்ளத்தாக்கில் அதிவேக இணைய சேவைகள் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


.

மூலக்கதை