மத்திய அரசின் பரிமாற்ற திட்டத்தின்கீழ் காஷ்மீர் மாணவர்கள்110 பேர் தமிழகம் வருகை

தமிழ் முரசு  தமிழ் முரசு
மத்திய அரசின் பரிமாற்ற திட்டத்தின்கீழ் காஷ்மீர் மாணவர்கள்110 பேர் தமிழகம் வருகை

காஷ்மீர்: ‘சமாக்ரிக்ஷா’ பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக செனாப் பிராந்திய  மாவட்டங்களின் பல்வேறு அரசு பள்ளிகளைச் சேர்ந்த 110 மாணவர்கள் குழு தமிழகத்திற்கு புறப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் செனாப் பிராந்திய  மாவட்டங்களுக்கு உட்பட்ட தோடா, ரம்பன் மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 110 பேர், மத்திய அரசின் ‘சமாக்ரிக்ஷா’ பரிமாற்ற திட்டத்தில் தமிழ்நாடு புறப்பட்டனர். பயணத்தை பள்ளி கல்வி ஆணையர் செயலாளர் ஹிர்தேஷ் குமார் சிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



அப்போது அவர் கூறுகையில், ‘‘நாடு முழுவதும் புதிய வழிகள் மற்றும் கல்வி வசதிகள் குறித்து மாணவர்கள் ஆராய்ந்து அறிந்துகொள்ள ‘சமாக்ரிக்ஷா’ திட்டம் கொண்டு வரப்பட்டது. இதுபோன்ற சுற்றுப்பயணங்களினால் மாணவர்கள் தங்கள் நாட்டைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள முடியும்.

நாட்டின் கலாசாரம் மற்றும் வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். நட்பு ரீதியாக பிற மாநில  நண்பர்களும் அவர்களுக்கு கிடைப்பர்.

அவர்களுடன் பழகுவதற்கும் நல்ல வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இதுவரை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்’’ என்றார்.

.

மூலக்கதை