தமிழ் நடிகையை மணந்த கிரிக்கெட் வீரர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழ் நடிகையை மணந்த கிரிக்கெட் வீரர்

மும்பை: தமிழ் நடிகை அர்ஷிதா ஷெட்டியை  மணந்தார் கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே. ஒரு கன்னியும் மூன்று  களவாணிகளும், உதயம் என்எச்4, இந்திரஜித் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பவர் அர்ஷிதா ஷெட்டி.   இவருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டேவுக்கும் சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

டிச. 2ம் தேதி திருமணம்  நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று மும்பையில் மணிஷ், அர்ஷிதா திருமணம் பாரம்பரிய முறைப்படி நடந்தது.

தலையில் தலைப்பாகை அணிந்து ஷர்வானி உடையில் மணிஷ் மாப்பிள்ளை கோலத்தில் வர, ஆரஞ்ச் நிறத்தில் ஜரிகை பார்டர் வேய்ந்த பட்டு  சேலை அணிந்திருந்தார்  அர்ஷிதா.

அவரது கழுத்தில் தாலி கட்டினார் மணிஷ். திருமண விழாவில் உறவினர்கள், நண்பர்கள், சில கிரிக்கெட் வீரர்கள்  கலந்துகொண்டனர்.

ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் மணிஷுக்கு பல்வேறு அணிகளின் வீரர்கள் திருமண வாழ்த்து தெரிவித்திருந்தனர்.



.

மூலக்கதை