மும்பை-அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டம் மறுபரிசீலனை: உத்தவ் தாக்கரே அறிவிப்பு

தினகரன்  தினகரன்
மும்பைஅகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டம் மறுபரிசீலனை: உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மும்பை: மும்பை-அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டம் உட்பட மாநிலத்தில் தற்போது நிறைவேற்றப்பட்டு வரும் மேம்பாட்டு திட்டங்கள் அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய தாம் உத்தரவிட்டுள்ளதாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான புல்லட் ரயில் திட்டத்துக்கு விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திட்டத்துக்கு தேவைப்படும் நிலத்தை கொடுக்க அவர்கள் மறுத்து வருகிறார்கள். இந்த நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இது குறித்து கூறியதாவது:இந்த அரசு ஏழைகளுக்கான அரசு ஆகும். நீங்கள் இப்போது கேட்டதுபோல நிச்சயமாக புல்லட் ரயில் திட்டத்தை மறுஆய்வு செய்வோம். ஆரே காலனி மெட்ரோ ரயில் நிறுத்த திட்டத்துக்கு தடை விதித்ததைப் போல இதற்கு நான் தடையா விதித்துள்ளேன்? கண்டிப்பாக இல்லை. புல்லட் ரயில் திட்டம் உட்பட மாநிலத்தில் நடந்து வரும் அனைத்து மேம்பாட்டுத் திட்டங்களையும் மறுபரிசீலனை செய்வோம். ஏனெனில் இந்த அரசு சாமானியர்களுக்கான அரசு. மாநிலத்தின் நிதி நிலைமை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிடும். விவசாயிகளுக்கு நிபந்தனையற்ற வகையில் கடன் தள்ளுபடி செய்வதில் அரசு உறுதியாக இருக்கிறது. இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.

மூலக்கதை