இந்தியரை பயங்கரவாதியாக அறிவிக்க பாக்., முயற்சி : சுதாரித்து மீட்டது மத்திய அரசு

தினமலர்  தினமலர்
இந்தியரை பயங்கரவாதியாக அறிவிக்க பாக்., முயற்சி : சுதாரித்து மீட்டது மத்திய அரசு

புதுடில்லி, : பாக்.,கைச் சேர்ந்த ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க, இந்தியா மேற்கொண்ட முயற்சி வெற்றி அடைந்தது. அதற்கு பழிவாங்கும் வகையில், நான்கு இந்தியர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்க பாக்., முயற்சி மேற்கொண்டுள்ளது.முட்டுக்கட்டைமத்திய அரசு, சரியான நேரத்தில் தலையிட்டு, இந்த முயற்சியை தவிடு பொடியாக்கி வருகிறது.

பாக்.,கில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில்,இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டது. இதற்கு, அமெரிக்கா, பிரான்ஸ் என, பல நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

ஆனால், பாக்.,குடன் நெருங்கிய நட்பு வைத்துள்ள சீனா, இதற்கு முட்டுக்கட்டை போட்டு வந்தது. ஆனால், இறுதியில், இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது. இந்தாண்டு, மே, 1ல், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக, ஐ.நா., பாதுகாப்புகவுன்சில் அறிவித்தது.இது, பாக்.,குக்கு மிகப் பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதன்பிறகு, ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்திலும், பாக்.,குக்கு சர்வதேச அரங்கில், மூக்குடைப்பே ஏற்பட்டது.

இதையடுத்து, இந்தி யாவை பயங்கரவாத நாடாக காட்டும் முயற்சியில் பாக்., இறங்கியுள்ளது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இதில், பல இந்திய நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.

இந்த மறுசீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள அஜோஸ் மிஸ்திரி மற்றும் வேணு மாதவ் தோங்கரா ஆகியோரை பயங்கரவாதிகளாக அறிவிக்கக் கோரி, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், பாக்., மனு கொடுத்தது. அதற்கு சீனாவும் ஆதரவு தெரிவித்தது.இது குறித்து முன்னதாகவே அறிந்த மத்திய அரசு, அந்த இருவரையும் பத்திரமாக, இந்தியாவுக்கு அழைத்து வந்தது.

மேலும், பாக்.,கின் முயற்சியும், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் முறியடிக்கப்பட்டது. இவர்கள், சரியான நேரத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்படாமல் இருந்தால், அவர்களை பாக்., கைது செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தன.நம் கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் விவகாரத்திலும் இதுவே நடந்தது. மத்திய கிழக்கு நாடான ஈரானில் தொழில் செய்து வந்த அவரை, பாக்., கைது செய்தது. ஆனால், பாக்.,கில் கைது செய்ததாகக் கூறியுள்ளது.

இந்நிலையில், மேலும் இரு இந்தியர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்கக் கோரி, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் பாக்., மனு கொடுத்துள்ளது.ஆந்திராவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் அப்பாஜி அங்காரா மற்றும்ஒடிசாவைச் சேர்ந்த கோபிந்தா பட்நாயக் தக்கிவலாசா ஆகியோரைபயங்கரவாதிகளாக பாக்., சித்தரித்துள்ளது.

அறிக்கை



இவர்கள் மீது, பாக்.,கில் எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல்அறிக்கையும் தாக்கல் செய்யப் பட்டது.இதை அறிந்து கொண்ட மத்திய அரசு, அவ்விருவரையும் சரியான நேரத்தில், ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்டு, இந்தியாவுக்கு அழைத்து வந்தது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், பாக்.,கின் கபட நாடகம் குறித்து விளக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதே போல, பிரஷாந்த் வைந்தம், தாரி லால் என்ற இருவர், பாக்.,கில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

இதையடுத்து, அவர்கள்தவறுதலாக எல்லை கடந்து வந்திருக்கலாம் என்றும், அவர்களை எந்த பிரச்னையும் இல்லாமல் விடுவிக்கும் படியும் இந்திய வெளியுறவு துறை கேட்டுக் கொண்டுள்ளது. அவர்கள் இருவருக்கும், துாதரக உதவி அளிக்கவும், வலியுறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை