தட்பவெப்ப மாறுதலுக்கான போராட்டத்தில் இந்தியா முதலிடம்: பியூஷ் கோயல்

தினமலர்  தினமலர்
தட்பவெப்ப மாறுதலுக்கான போராட்டத்தில் இந்தியா முதலிடம்: பியூஷ் கோயல்

மொஹாலி: தட்பவெப்ப மாறுதலுக்கான போராட்டத்தில் உலக நாடுகள் மத்தியில் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்


பஞ்சாப் மாநிலம் மொஹாலி பல்கலையில் நடந்த தட்பவெப்ப மாறுதல் அதற்கான தீர்வுகள் தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கின் துவக்கவிழாவில் மத்திய ரயில்வே, வர்த்தக தொழில்துறை அமைச்சர் கலந்து கொண்டு பேசினார்.

அவர் மேலும் பேசியதாவது, ‛21ம் நூற்றாண்டில் இந்தியா வறுமை, தட்பவெப்ப மாறுதல், பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதில் மற்ற உலக நாடுகளின் மத்தியில் முதலிடம் வகிக்கிறது.

சமூகத்தின் நன்மை கருதி பொருளாதார முன்னேற்றத்தின் போது சுற்றுப்புற சூழ்நிலை பாதிக்கப்பட கூடாது. சுற்றுப்புற சூழ்நிலை மற்றும் பொருளாதார முன்னேற்றம் இரண்டிலும் சமநிலை பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியாவில் சுற்றுப்புற சூழ்நிலை பாதுகாப்பு பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கவுதில்யா அர்த்தசாஸ்திரத்தில் சுற்றுப்புறசூழல், காடுகள் மற்றும் விலங்குகள். மற்றும் இயற்கையின் முக்கியத்துவம் கூறப்பட்டுள்ளது.

நான்கு வருடங்களில் இந்தியாவில் உள்ள ரயில்கள் அனைத்தும் மின்மயமாக்கப்படும். பா.ஜ., ஆட்சியில் தான் 90 சதவீதம் பேருக்கு சமையல் கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.' இவ்வாறு அமைச்சர் பேசினார்

கூட்டத்தில் பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி சுவாதன்டர் குமார், இக்கருத்தரங்கின் நோக்கம் சுற்றுப்புற சூழ்நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் என்று கூறினார்.

மூலக்கதை