தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் சொத்து மதிப்பு உயர்வு : வேட்பு மனுவில் தகவல்

தினகரன்  தினகரன்
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் சொத்து மதிப்பு உயர்வு : வேட்பு மனுவில் தகவல்

ஐதராபாத்: தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் சந்திரசேகர ராவ் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தெலங்கானாவில் அடுத்த மாதம்  7ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதில் மீண்டும் ஆட்சியை பிடிக்க தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவரும், முதல்வருமான சந்திரசேகரராவ் தீவிர முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் கஜ்வெல் தொகுதியில் போட்டியிடும் சந்திரசேகரராவ் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது சொத்து விவரங்களை கூறியுள்ளார் .அதில் நகை மற்றும் ஆபரணங்கள் என அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் சேர்த்து 2014-2018-ம் ஆண்டுகளில் ரூ.22. 60 கோடி உள்ளது. நான்கு வங்கி கணக்குகளில் ரூ. 5.53 கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், 2017-18-ம் ஆண்டில் விவசாய வருமானமாக ரூ. 91.52லட்சம் கிடைத்திருப்பதாகவும், தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் தேர்தலில் போட்டியிட்ட போது அவரது அசையும் மற்றும் அசையா சொத்து மதிப்பு ரூ.7 கோடி என அவர் வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தது நினைவு கூறத்தக்கது. வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, நான் எப்போதும் கடவுள், மக்களின் ஆசிர்வாதத்தை பெற்றுதான் தேர்தலில் போட்டியிடுவேன்.  இவர்களின் ஆசிர்வாதத்துடன் நாங்கள் 100 தொகுதிகளில் வெற்றி பெறப்போகிறோம் என்றார். மேலும் பேசிய அவர் தான் வெற்றி பெற்ற மிகப்பெரிய யுத்தம், தெலங்கானா தனி  மாநிலம் யுத்தம்தான் என்றார்.

மூலக்கதை